பூத்து குலுங்கும் பன்னீர் ரோஜாக்கள்

ராயக்கோட்டை, ஆக.14: ராயக்கோட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால், பன்னீர் ரோஜா செடிகள் செழித்து வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பூக்களை சாகுபடி செய்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் பெங்களூரு ரோஸ் எனும் பன்னீர் ரோஜா அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கு மாலை கட்டவும், சுவாமி அலங்காரத்துக்கு பன்னீர் ேராஜா அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. தவிர, சீசன் இல்லாத காலத்தில் பன்னீஸ் ரோஜா இதழ்கள் உணவு பொருட்கள், சென்ட், ரோஸ் வாட்டார் தயாரிக்க விற்பனை செய்து விடுகின்றனர்.

இதனால் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, வாழையை ேபால அனைத்து நிலைகளிலும் வருவாய் கிடைக்கிறது. ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால், பன்னீர் ரோஜா சொடிகள் செழித்து வளர்ந்துள்ளது. அதிகப்படியான மொக்குகள் விட்டு, பூக்கள் பூத்துள்ளது. இதையடுத்து ராயக்கோட்டை மண்டி மற்றும் ஓசூர் மலர் சந்தைக்கு பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ராயக்கோட்டை மண்டியில் பன்னீர் ரோஜா கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர்.

Related Stories: