திருவாரூர், ஆக.13: ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற கோரி திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நெல்லை மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் படு கொலையினை கண்டித்தும், ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற கோரியும் திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாவட்ட செயலாளர்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றி, தமிழ்ஓவியா ஆகியோர் தலைமையிலும், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, மண்டல துணை செயலாளர் ரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி முதன்மை செயலாளர் பொதினிவளவன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக நகர செயலாளர் ஆசைதம்பி வரவேற்றார். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.
