பண்டரிநாதன் கோயில் தெருவில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கரூர், ஆக. 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் கோயில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியை ஒட்டி பண்டரிநாதன் கோயில் தெரு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில், நேற்று இந்த பகுதியின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து சாலையில் பரவி செல்கிறது.

இதன் காரணமாக நடந்தும், வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.குடிநீரின் தேவை அவசியம் என்பதால் இதனை பார்வையிட்டு உடைப்பு சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: