சமூக நீதி விடுதியின் மாணவிகளுக்கு தட்டச்சு பயிற்சி

மதுரை, ஆக. 11: மேலூரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு கல்லூரி மாணவிருக்கான சமூகநீதி விடுதி அமைந்துள்ளது. இங்குள்ள மாணவியரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தட்டச்சு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்ைப கலெக்டர் பிரவின்குமார் தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாணவி சவுமியா கூறும்போது, ‘‘எங்கள் விடுதியில் கடந்த ஜூலை 31ல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கூறினார். அப்போது நாங்கள் மாலை நேரத்தில் விடுதியிலேயே தட்டச்சு பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரினோம். அதனை ஏற்று திறன் மேன்பாட்டுக் கழகம் சார்பில் 7 தட்டச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, தட்டச்சு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

தற்போது நாங்கள் அனைவரும் தட்டச்சு பயிற்சி மேற்கொள்கிறோம். எதிர்வரும் தட்டச்சு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம். பட்டப்படிப்பை முடித்த பிறகு, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்’’ என்றார்.

 

Related Stories: