கொடைக்கானல், ஆக. 11: கொடைக்கானலில் நகர திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் சாம்ராஜ் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா, இளம் பேச்சாளர் செல்வகுமார் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், நகர அவை தலைவர் மரிய ஜெயந்தன், நகர துணை செயலாளர்கள் சக்திமோகன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
