சடையநேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற நடவடிக்கை

உடன்குடி,ஆக.11: மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார விவசாயிகள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா வள்ளியம்மாள்புரத்தில் நடந்தது. விழாவுக்கு சங்கத்தலைவர் தானியேல் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். சடையனேரி கால்வாய் விவசாய சங்கத்தலைவர் ஆதிலிங்கம், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தலைவர் லூர்துமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்போது அவர்கள், வேளாண் துறை அதிகாரியிடம் விவசாயிகள் தொடர்பில் இருந்தால் பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஏராளமான வழிமுறைகளை தெரிவிப்பர் என்றனர்.

இதையடுத்து சடையநேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கல்விளை வழுக்கை குளம் பகுதியிலிருந்து திருப்பணி பாலம் வரை 40அடி அகலத்தில் உள்ள கால்வாய் பராமரிப்பின்றி தூர்ந்து கிடப்பதை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: