பொன்னமராவதி, ஆக. 9: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு 10 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பெட்டகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் சங்கத்தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். 10 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பழங்கள், பிரட், ஹார்லிக்ஸ் மற்றும் பேரிச்சம்பழம் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவர் ராமராஜ் மற்றும் செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து டாக்டர் ராமராஜ் விரிவாக விளக்கி பேசினார். இதில் வட்டாரத் தலைவர் கிரிதரன், சாசன தலைவர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் சகுபர் சாதிக் அலி, செயலாளர் ஜெயசூர்யா பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
