பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விஏஓ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஆக. 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் நவநீதன், பொருளாளர் ரேவதி, மகளிர் அணி செயலாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். பத்தாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என பெயரை மாற்றி அரசாணை வழங்க வேண்டும்.

பதவி உயர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும். டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதலில் அரசு முதன்மை செயலர் அறிவித்த உத்தரவை பின்பற்ற வேண்டும். டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை செய்வது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: