ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 9: கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், ராஜா முகம்மது, முருகேசன், ராஜூ, மாவட்ட செயலாளர் கந்தசாமி, தண்டபாணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்ய வேண்டும். இன்று பீகார், நாளை நாடு முழுதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் ஏராளமானோர்களை நீக்கியதை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Related Stories: