முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை

ஓசூர், ஆக.9: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-2026ம் கல்வியாண்டிற்கான எம்.ஏ.(தமிழ், ஆங்கிலம்), எம்.காம்.(வணிகவியல்), எம்.எஸ்.சி (கணிதம். கணினி அறிவியல்) ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 11.8.2025 அன்று சிறப்பு ஒதுக்கீடும்(முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு மற்றும் பழங்குடியினர்), கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. 13.8.2025 அன்று பொது மாணவர் கலந்தாய்வின் போது மாணவர்கள் தங்களது இணைய தளம் மூலம் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல் மூன்று படிவங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: