கோவில்பட்டியில் சுற்றி திரிந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவில்பட்டி, ஆக.9:கோவில்பட்டியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சந்தனகுமார்(27). எந்தவித ஆதரவு இல்லாத நிலையில் இருந்த அவர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றி திரிந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர் காப்பக நிர்வாகி தேன்ராஜா, திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணைத்தலைவர் அமலி பிரகாஷ், தொண்டு நிறுவன மேற்பார்வையாளர் மாடசாமி, செவிலியர் கற்பகமீனா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சந்தனகுமாரை மீட்டனர். பின்னர் அவரை குளித்து சுத்தப்படுத்தி புதிய உடைகள் அணிவித்து பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Related Stories: