ஒத்தக்கடையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற என்ன நடவடிக்கை? விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஆக. 8:திருமோகூரைச் சேர்ந்த வீரமணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை – மேலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள பக்கவாட்டு நடைபாதைகள் மற்றும் பொது நடைபாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பொது நடைபாதைகளை ஆக்கிரமித்து, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய தனி நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் நிகழாமல் இருக்க சிசிடிவி கேமிரா கண்காணிப்பை உறுதி செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், இப்போதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை காண முடிகிறது. எனவே, ஒத்தக்கடை பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

Related Stories: