திருவாரூர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவாரூர், ஆக. 8: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுக்கா கோட்டூர் மற்றும் வண்டாம்பாளை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வியில் சேர்ந்து பயில்வதற்காக நேரடி மாணவர் சேர்க்கை வரும் 31ந் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் நேரடியாக விண்ணப்பித்து தொழிற்பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம்.

மேலும் இது தொடர்புடைய அனைத்து விவரங்களும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பாக ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரையிலும், பெண்களுக்கு 14 முதல் உச்சவயதுவரம்பு இல்லை.

மேலும் மாணவ,மாணவியருக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படும். படித்துமுடித்தபின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories: