கடற்கரையில் பூங்கா அமைக்க கோரிக்கை

தொண்டி, ஆக.8: தொண்டி கடற்கரை பகுதி மாவட்டத்தில் நீளமான கடற்கரையை கொண்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூருக்கு தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கடற்கரை பகுதியில் எவ்வித வசதியும் இல்லாததால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு செல்கின்றனர். அமர்வதற்கு இருக்கை கூட கிடையாது. பொதுமக்களின் நலன் கருதி பொழுது பூங்கா அமைக்க வேண்டும். இது குறித்து தொண்டி மமக செயலாளர் பரக்கத் அலி கூறியது, தொண்டி பகுதி மக்கள் பொழுது போக்கிற்காக ராமநாதபுரம் அரியமான் பீச் உள்ளிட்ட பகுதிக்கு அதிக பொருட்செலவு செய்து செல்கின்றனர். தொண்டி கடற்கரையில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: