கலெக்டரிடம் மக்கள் மனு

 

திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஜம்புளியம்பட்டியில், விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் கோயிலை சுற்றியுள்ள பகுதி மற்றும் சிலுவத்தூர் ரோட்டில் அரசுக்கு பாத்தியப்பட்ட வண்டிப் பாதையை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். அதனை அகற்றி தர வலியுறுத்தி கலெக்டர் சரவணனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பாலகிருஷ்ணாபுரம் 7வது வார்டில் உள்ள விநாயகர், பாலமுருகன். ஆஞ்சநேயர் கோயில் பகுதி அருகே சிலுவத்தூர் ரோடு அரசு வண்டிப் பாதை அதன் அருகே உள்ள கிணற்றை சேதப்படுத்தி, சிலர் ஆக்கிரமிப்பு செய்து தகர சீட்டு அமைத்து உள்ளனர். இதனால் பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் கலெக்டர் நேரடியாக விசாரணை செய்து வண்டி பாதை ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Related Stories: