தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.50ஆக குறைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து முருங்கை வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150ஆக விற்பனை செய்யப்பட்டது. விலை குறையாமல் இருந்த முருங்கை, தற்போது வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று தர்மபுரி மாவட்ட உழவர் சந்தையில், ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- பாலக்கோடு
- Papparapatti
- அட்டகபாடி
- அரூர்
- பாப்பிரெடிபட்டி
- பொம்மிடி
- கம்பைநல்லூர்
- தோப்பூர்
- Nallampalli
