குடியிருப்பு பகுதியை ஒட்டி வளர்ந்த சீத்தை முட்கள் அகற்றப்படுமா?

கரூர், டிச. 4: கரூர் நகரப்பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி வளர்ந்துள்ள சீத்தை முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் நகராட்சியில் தாந்தோணிமலை, ராயனூர், சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், இனாம்கரூர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளன.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் அதிகளவு சீத்தை முட்செடிகள் வளர்ந்துள்ளன. நிலத்தடி நீர் மட்டத்தை பாதிப்பது போன்ற பல்வேறு விளைவுகளை இந்த செடிகள் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட காலியிடங்களில் அதிகளவு சீத்தை முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி பகுதியில் வளர்ந்த சீத்தை முட்செடிகளை கரூர் மாவட்ட நிர்வாகம் முன்வந்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதே போல், அதிகளவு வளர்ந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டத்துக்கும் வழி வகுத்து வரும் இந்த வகை செடிகளை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும், பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: