7,258 மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலவச பஸ் பாஸ் வினியோகம் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், செப்.5: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதற்கட்டமாக 50 பள்ளிகளை சேர்ந்த 7,258 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டில் இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை மாணவர்களிடம் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் போக்குவரத்த மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவர்களின் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு, போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதற்கட்டமாக 7,258 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு படி படியாக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்நிலையில், கே.வி.குப்பம் அடுத்த வடுகங்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்ைட மாவட்டங்களில் உள்ள 620 அரசு பள்ளி, தனியார் பள்ளி, ஐடிஐ, பாலிடெக்னிக், கல்லூரிகளில் இருந்து இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 50 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 258 இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்’ என்றனர்.

The post 7,258 மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலவச பஸ் பாஸ் வினியோகம் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: