57 வருடங்களுக்கு பிறகு தென் இந்தியாவிலிருந்து அகில இந்திய ரயில்வே சம்மேளத்தின் தலைவராக கண்ணையா தேர்வு

சென்னை: தென் இந்தியாவிலிருந்து எஸ்.ஆர்.எம்.யூ.வின் பொதுச்செயலாளர் கண்ணையா அகில  இந்திய ரயில்வே சம்மேளத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து உதவி பொதுச்செயலாளர் மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கை: .அகில இந்திய ரயில்வே சம்மேளனம் என்பது கொங்கண் ரயில்வே உட்பட 19 ரயில்லேக்களையும், ஐசிஎப் உள்ளிட்ட உற்பத்தி கேந்திரங்களையும் உள்ளடக்கியது. ஏறக்குறைய 14 லட்சம் ரயில்வே தொழிலாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக ஏஐஆர்எப் உள்ளது.  கடந்த வாரம் நடந்த தேர்தலில் என்.கண்ணையா ஏஐஆர்எப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக 57 வருடங்களுக்குப் பிறகு தென்னக்கத்திலிருந்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச்செயலாளர் என். கண்ணையா ஏஐஆர்எப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புகழ் பெற்ற தலைவர்கள் அலங்கரித்த பதவியை வகிக்க உள்ளார். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

The post 57 வருடங்களுக்கு பிறகு தென் இந்தியாவிலிருந்து அகில இந்திய ரயில்வே சம்மேளத்தின் தலைவராக கண்ணையா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: