ஆனி பிரதோஷம், ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி

திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன்படி ஆனி மாத பிரதோஷம், ஆடி 1ம் தேதி அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு வரும் ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது எனவும், மழை பெய்தால் அனுமதி குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post ஆனி பிரதோஷம், ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: