13 வயது சிறுமி வயிற்றில் வளரும் 7 மாத குழந்தையை அகற்ற வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த வாரம் பக்கத்து வீட்டில் உள்ளவரால் ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார். சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதையடுத்து 24 வாரங்களான சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி சிறுமியின் தந்தை ேகரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில், திருச்சூரை சேர்ந்த 13 வயது சிறுமியின் தாயாரும் இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், தனது 16 வயது மகனால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பிணியானார். தற்போது, 30 வாரமான கருவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி அருண், ‘சமீப காலமாக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும் கர்ப்பிணியாவதும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. சிறுமிகள் இன்டர்நெட் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வி முறையை விரிவுபடுத்த வேண்டும். இந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து 30 வார குழந்தையை வெளியே எடுக்கலாம்,’ என்று உத்தரவிட்டார்….

The post 13 வயது சிறுமி வயிற்றில் வளரும் 7 மாத குழந்தையை அகற்ற வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: