கவுல்பாளையம் கிராமத்தில்s பெண்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர்,பிப்.25: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் பாதுகாப்பாக இருப்பதற்கு வழிமுறைகளை எடுத்துரைக்கவும் காவல் துறையினர் கிராமங்களை நோக்கிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய புதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார். இதன்படி பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கவுல்பாளையம் கிராமத்தில் பெரம்பலூர் காவல் நிலையம் சார்பாக, கிராம விழிப்புணர்வுக் கூட்டம் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் நடத்தப்பட்டது. அதில் கவுல்பாளையம் கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கிராமத்தில் அருகிலுள்ள கல்குவாரிக்கு தினமும் சரக்கு லாரிகள் அளவுக்கு அதிகமாக காலையில் வந்து செல்வதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்துவதாக இருப்பதாகவும், அதனை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். குழந்தைக ளுக்கு என தனியாக மீட்டிங் நடத்தியதில் குழந்தைகள் தங்களுக்கு அப்பகுதியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதேபோல், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி கிராமங்களில் காவலர்களை ரோந்து அனுப்பியதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் உள்ளதா? பணிபுரிந்து இரவு நேங்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு உள் ளதா என்றும் ரோந்து மேற்கொண்டு பொதுமக்களிடம் காவலன் செயலிகுறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: