தேவகோட்டையில் பலி வாங்க காத்திருக்கும் பள்ளம் உடனே மூட கோரிக்கை

தேவகோட்டை, பிப். 25: தேவகோட்டையில் ஆபத்தான முறையில் உள்ள தண்ணீர் நிரம்பிய பள்ளத்தை உடனே மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  தேவகோட்டை அரசு மருத்துவமனை அருகில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இத்தொட்டியின் மெயின் வால்வு பழுதாகி சீர்செய்தனர். இதற்காக 10 அடிக்கும் மேல் ஆழமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி அதிலிருந்த கான்கிரீட்டை அகற்றி அதற்கு கீழேவுள்ள வால்வை கழற்றி மாற்றினர். பணி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் தற்போது சரிசெய்யப்பட்ட வால்வில் இருந்து குடிநீர் கசிந்து கிணறு போல் தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. மேலும் அருகிலுள்ள வால்விலும் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது.

இந்த குடிநீர் தேக்க தொட்டி அடுத்தாற்போல் 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் இடைவேளை நேரத்தில் தொட்டியின் அருகேயுள்ள பள்ளம் பக்கம்தான் ஆபத்தான முறையில் விளையாடி வருகின்றனர். எனவே குடிநீர் வால்வு கசிவை சரிசெய்வதுடன் பள்ளத்தை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் செல்வகணேசன் கூறுகையில், ‘தினமும் குடிநீர் கசிந்து வீணாக கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. எனவே இதனை சரிசெய்ய வேண்டும். அதேபோல் சகாவு வாங்க காத்திருக்கும் பள்ளத்தை கால தாமதம் இன்றி மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: