பெரம்பலூரில் 31ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம் குழு விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர், ஜன. 28: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் 2019-2020ம் ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இருபாலாருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 31ம் தேதி நடக்கிறது. கை, கால் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம்- கால்ஊனமுற்றோர், 100 மீட்டர் ஓட்டம்- கை ஊனமுற்றோர், 50 மீட்டர் ஓட்டம் - குள்ளமானோர், குண்டு எறிதல்- கால் ஊனமுற்றோர், 100 மீட்டர் சக்கர நாற்காலி-இருகால்களும் ஊனமுற்றோருக்கு நடக்கிறது. பார்வையற்றோர் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம்- முற்றிலும் பார்வையற்றோர், 100 மீட்டர் ஓட்டம்- மிக குறைந்த பார்வையற்றோர், நின்ற நிலை தாண்டுதல- மிக குறைந்த பார்வையற்றோர், குண்டு எறிதல்- முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோருக்கு நடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம்- புத்தி சுவாதினம் முற்றிலும் இருக்காதவர்கள், 100 மீட்டர் ஓட்டம்- புத்தி சுவாதினம் நல்ல நிலையில் இருப்பவர்கள். குண்டு எறிதல்- புத்தி சுவாதினம் முற்றிலும் இருக்காதவர்கள், நின்ற நிலையில் தாண்டுதல்- மூளை நரம்பு பாதிப்பு- புத்திவாதினம் நல்ல நிலையில் இருப்பவர்கள். காது கேளாதோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) -குழுவுக்கு 5 நபர்கள், மேஜைபந்து- குழுவுக்கு 2 நபர்கள் ஆகிய விளையாட்டுகளும் பார்வையற்றோர்கள் பிரிவில் கையுந்துபந்து (அடாப்டட் வாலிபால்) -ஒரு குழுவுக்கு -7 நபர்கள் விளையாட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து- ஒரு குழுவுக்கு -7 நபர்கள் விளையாட்டும், காது கோளாதோர் பிரிவில் கபடி - ஒரு குழுவுக்கு 7 நபர்கள் ஆகிய விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடக்கிறது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு குறிப்பிட்ட பிரிவை சார்ந்தவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவிலான இந்த விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இப்போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் மாநில போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: