இளம் பெண்ணை கடத்திய போலீஸ் ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை

வந்தவாசி, டிச.3: வந்தவாசி அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற  பைனான்ஸ் அதிபர், போலீஸ் ஏட்டு உட்பட 4 பேரை  ேபாலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23வயது இளம்பெண். இவர் கடந்த 28ம் தேதி வீட்டின் பின்புறம் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து காரில் ஏற்றினர். இளம் பெண் காப்பாற்றும்படி கூறி அலறிகூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இளம்பெண்ணின் தம்பி, தனது அக்காவை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் செல்வதை பார்த்து சத்தம் போட்டபடி அக்காவை மீட்க ஓடினார். ஆனால், அதற்குள் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுகுறித்து, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு கார் சென்றவழியே தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இளம்பெண்ணின் தந்தை நேற்று முன்தினம் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதில், செய்யாறை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சங்கர்(50), அவரது சகோதரரும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரியும் தர்(40) மற்றும் பைனான்ஸ் ஊழியர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் சேர்ந்து தனது மகளை காரில் கடத்திச் சென்றதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து இளம் பெண்ணை கடத்திய பைனான்ஸ் அதிபர், போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார். காரில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: