ராஜபாளையத்தில் கொசுப்புழு இருந்த தியேட்டருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

ராஜபாளையம், நவ.12: ராஜபாளையம் திரையரங்குகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசுப்புழு இருந்த ஒரு தியேட்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், வட்டாட்சியர் ஆனந்தராஜ் முன்னிலையில் பொதுசுகாதார பிரிவு பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பிரிவு பணியாளர்கள் சுகாதார உறுதிமொழி எடுத்தனர்.

அதன்பின்னர் நகர்நல அலுவலர், வட்டாட்சியர் தலைமையில் நகரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், தென்காசி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கில் கொசுப்புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தியேட்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பத்ரிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: