5000 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

அரியலூர்,செப்.20: அரியலூர் வட்டாரத்தில் சுமார் 5ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்காச்சோளப் பயிரில் ராணுவ படைப்புழு தாக்குதலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநர் பூவலிங்கம் தெரிவித்தார்.அரியலூர் வட்டாரத்தில் தற்போது மழைநீரை பயன்படுத்து மக்காச்சோளம் விதைப்புபணி முடிந்து 25-30 நாட்கள் பயிராக உள்ளன மேலும் - மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளை பயன்படுத்த வேண்டும் வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டனர். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100கிலோ வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும்.இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். விதை முளைத்து வரும் காலங்களில் படைப்புழு தாக்குதலைத் தவிர்த்திட அவசியம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு பேவேரியா பேசியானா 10 கிராம் அல்லது தயோமீதாக்சம் 30 எப்எஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு வரிசையில் விதையை நெருக்கமாக விதைத்தால் படைப்புழு எளிதில் பரவும். மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 40 செ. மீட்டரும், பயிருக்கு பயிர் 25 செ.மீட்டரும் இடைவெளி விட வேண்டும். 10 வரிசைக்கு ஒரு வரிசை விதைக்காமல் விட்டு இடைவெளி பராமரித்தால் பயிரைக் கண்காணிக்கவும், பூச்சிக்கொல்லி தெளிக்கவும் எளிதாக இருக்கும். ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறி வைத்தல் வேண்டும். இதன் மூலம் தாய்பூச்சி முட்டையிடுவதைக் கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து விதைத்த 25 நாட்கள் வரை பயிரில் முட்டை குவியல்கள், புழுக்களைக் கையால் சேகரித்து அழிக்க வேண்டும்.

வரப்பு பயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு ஆகியவற்றை 4 வரிசை விதைக்க வேண்டும். ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றைப் பயிரிட வேண்டும். இதனால் படைப்புழுவின் தாய் பூச்சி முட்டையிடுதல் வெகுவாகக் குறையும். விதைத்த 10 முதல் 20 நாளில் அசாடிரக்டின் 1 சதவீதம் இசி 20 மில்லி அல்லது தயோடிகார்ப் 20 கிராம் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இவ்வாறு மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 40 - 45 நாட்களில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தி விட்டால் 45 - 105 நாள் வரை இப்புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து நாம் எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஓட்டக்கோவில் கிராமத்தில் வேளாண்மை அலுவலர் சவீதா இனகவர்ச்சி பொறிகளை வயலில் வைக்கும் முறைகள் பற்றியும் மெட்டாரரைசியம் பூஞ்ஞான கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை பற்றியும் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் ஒட்டக்கோவில் பொய்யாதநல்லூர் இலுப்பையூர் ராயம்புரம் சென்னிவனம் பொட்டவெளி போன்ற கிராமங்களில் பூச்சி தென்படின் உதவி வேளாண்மை அலுவலர் இளங்கள் 9486430542 கல்லங்குறிச்சி கயர்லாபாத் வாலாஜாநகரம் அமீனாபாத் அரியலூர் வடக்கு அரியலூர் தெற்கு கிராமங்களில் பூச்சி தென்படின் உதவி வேளாண்மை அலுவலர் தேவி (9843454296) .கடுகூர் அயன்ஆத்தூர் விளாங்குடி தேளுர் பெரியநாகலூர் போன்ற கிராமங்களில் பூச்சி தென்படின் வேல்முருகன் (9976112120), நாகமங்கலம் சிறவளுர் பெரியதிருக்கோணம் ஒரியூர் புங்கங்குழி புதுப்பாளையம் ரெட்டிபாளையம் போன்ற கிராமங்களில் பூச்சி தென்பட்டால் துணை வேளாண்மை அலுவலர் பீட்டர்அந்தோணிராஜ் (9360580670) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் அருங்கால் பொய்யூர் இடையத்தான்குடி கருப்பூர் ஆண்டிப்பட்டாகாடு ஆலந்துரையார்கட்டளை போன்ற கிராமங்களில் பூச்சி தென்பட்டால் சுப்ரமணி( 8056881108) ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு வாலாஜாநகரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: