கங்கைகொண்ட சோழபுரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் பென்சனர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஜெயங்கொண்டம்,செப்.19: உடையார்பாளையம் வட்டம் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். மணியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் கங்கைகொண்டசோழபுரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை சுற்றி பேருந்துகள் மூலம் பயணம் செய்யும் வகையில் தரமான சாலை அமைக்க வேண்டும். ஏரியின் நடுவே சிறு சிறு திடல்கள் அமைக்க வேண்டும். திடல்களில் பறவைகள் வந்து தங்குவதற்கு ஏற்ப மரங்கள் வளர்க்க வேண்டும்.

இப்பணியை தமிழக அரசு ஏற்று நிறைவேற்றுவதற்கு முன்னோடியாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து சிமெண்ட் ஆலைகளும் ஒதுக்கி வைத்துள்ள பொதுநல நிதியை பயன்படுத்தி கரையை பலப்படுத்தியும் சம அளவு ஆழப்படுத்தும் போது கிடைக்கும் கூடுதல் மண்ணை தேவையான பொதுமக்கள் வேண்டுமளவு கொண்டு செல்லவும் மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொருளாளர் சுந்தரேசன், ராமசாமி, ராஜேந்திரன், கோவிந்தராஜன், பன்னீர்செல்வம், சண்முகசுந்தரம், கலியமூர்த்தி ஆகியோர் பேசினர்.

Related Stories: