திருவில்லிபுத்தூரில் பெருந்திரள் பேரணி

திருவில்லிபுத்தூர், ஆக.11: தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, திருவில்லிபுத்தூரில் பெருந்திரள் பேரணி நடைபெற்றது. ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலையில் தொடங்கிய பெருந்திரள் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார அதிபர் அல்வாரஸ் செபாஸ்டின் தலைமை வகித்தார். இதில், அருட்தந்தை சந்தன சகாயம் மற்றும் எலியாஸ்ராஜா சூசை பேசினர். நிறைவாக எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர் பேசினார். பின்னர் இது தொடர்பாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.  புனிதன், ராஜூ, மாற்கு செல்வராஜ் உட்பட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: