குப்பையால் நிரம்பும் கண்மாய் * நோய் பரவும் அபாயம் வீணடிக்கப்பட்ட மக்கள் பணம் ஆடி உற்சவ திருவிழாவில் பிரச்னை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேவகோட்டை. ஜூலை 23:தேவகோட்டை நகர் ஸ்ரீரெங்கபுரம் அருணகிரிபட்டிணத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் இரண்டு தரப்பினரும் ஒருங்கிணைந்து கோவிலில் ஆடி உற்சவத் திருவிழாவை நடத்துவது வழக்கம். பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இவ்விழாவில் ஆண்களும், பெண்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம், சக்தி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வந்தனர். சில ஆண்டு காலமாக இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் திருவிழாவினை தேவகோட்டை வருவாய்த் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதல் படியும், நீதிமன்றங்களின் உத்தரவுப்படியும் நடைபெற்று வந்தது. அதேபோல் இந்த வருடம் ஆடி 14ம் தேதி கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்டப்படுகிறது. இந்நிலையில் இரண்டு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ் கடந்த 19ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்து அதன் நகல்களை இரண்டு தரப்பினருக்கும் அனுப்பி வைத்தனர். மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், போலீஸ் துறையினருக்கும் உத்தரவின் நகல் அனுப்பி வைத்தனர். அந்த உத்தரவில், முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவத் திருவிழாவை இக்கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சமுதாயத்திற்கு ஒரு சீட்டு வீதம் எழுதிப்போட்டு சீட்டு குலுக்கி சீட்டு விழும் உறவின் முறையினர் சாமி கரகம் எடுப்பவரைத் தேர்வு செய்யலாம். நீதிமன்ற வழக்குகளுக்கு இரண்டு தரப்பினரும் கட்டுப்படவேண்டும். சட்டம் ஒழுங்கை பேண வேண்டும். என உத்தரவிட்டார். இது தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் இரண்டு தரப்பினருக்குள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடன்பாடு ஏற்படவில்லை.சமூக ஆர்வலர் கணேசன் பொதுமக்கள் சார்பில் கூறுகையில், கோவில் திருவிழாவில் இந்த வருடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி. நேரடி கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என வலியுறுத்தினார்.

Related Stories: