நீதிபதியை கண்டித்து நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு

செம்பட்டி, ஜூன் 26: நிலக்கோட்டையில் குற்றவியல் நடுவர் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் இங்கு புதிதாக வந்த பெண் நீதிபதியின் வீட்டு பொருட்களை கொண்டு வந்த பணியாளர் ஒருவர் டூவீலரில் நீதிமன்ற வளாகத்தில் பேசி கொண்டிருந்த வழக்கறிஞர்கள் நடுவில் சென்றுள்ளார். இதனால் வழக்கறிஞர்கள் சிலர் அவருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அன்றிரவு வழக்கறிஞர்கள் எந்த அனுமதியுமின்றி நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பெண் நீதிபதி வழக்கறிஞர்களை எச்சரித்து அனுப்பினார். இதை கண்டித்து வழக்கறிஞர்கள் நிலக்கோட்டை நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலகுமார் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்நிலையில் நேற்று பெண் நீதிபதியை கண்டித்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: