போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி காரியாபட்டி பகுதியில் கோடை உழவு செய்து மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

காரியாபட்டி, மே 23: காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் ஆவியூர், அரசகுளம், எஸ்.மரைக்குளம், உழக்குடி, பனைக்குடி உட்பட அனைத்து கிராமங்களிலும் இரு போக விவசாயம் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது மழை பொய்த்து விவசாயம் செய்வது குறைந்துவிட்ட நலையில் ஒரு சில பகுதிகளில் கோடை உழவு பணிகளை செய்ய விவசாயிகள் துவங்கிவிட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் விவசாயிகள் நிலங்களை புழுதி உழவாக உழுது போட்டுள்ளனர்.

இதனால் அடுத்து பயிர் வளர்வதற்கு ஏற்ற வகையில் மண்ணின் இறுக்கம் குறைந்து பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.அடுத்து ஆடி பட்டத்தில் பெய்கின்ற மழையில் விதைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளனர். கோடை உழவு செய்வதன் மூலம் மழைநீர் நிலத்தில் சேகரிக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் கோடை உழவு செய்து மழைக்காக காத்திருக்கின்றனர்.

Related Stories: