108 ஆம்புலன்சில் பணம் பட்டுவாடா செய்ய திட்டமா? தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சியினர் புகார்

அரியலூர், மார்ச் 14:  108 ஆம்புலன்சில் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம்  நகர பகுதியில் இருந்து கிராம பகுதிக்கு எடுத்து சென்று பணப்பட்டுவாடாவை செய்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. இந்நிலையில் ஆளும் கட்சியாக உள்ள மத்திய, மாநில அரசுகள்  பணப்பட்டுவாடா செய்ய இந்த தேர்தலிலும் 108 ஆம்புலஸ்சை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக  ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள் தங்களுக்கு சாதகமானவர்களை  இரவு நேர பணியில் பயன்படுத்தி கொள்வது என்றும், இதற்காக கிராமத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ்க்கு உடல் நிலை சரிஇல்லை என்று போன் செய்து அதன்  நகரத்தில் இருந்து கிராமங்களுக்கு பணத்தை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தடுக்க  அனைத்து 108 ஆம்புலஸ்சிலும் சி.சி.டி. கேமரா பொறுத்த வேண்டும், 108 ஆம்புலஸ்சில் உண்மையான நோயாளி அழைத்து செல்லப்பட்டாரா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று  அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: