ஆளுங்கட்சி விளம்பரம் அழிப்பதில் மெத்தனம்

ஊட்டி, மார்ச் 14: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டுள்ள ஆளுங்கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மே 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்றைய தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், அரசு அலுவலகங்கில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் புகைப்படங்கள், அரசு விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் தட்டிகள் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே ஆளுங்கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளது.

குறிப்பாக, ஊட்டி - கூடலூர், ஊட்டி - மஞ்சூர், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பங்கள் அழிக்கப்படாமல் உள்ளது. மேலும், ஆளுங்கட்சி விளம்பரங்களை மட்டும் விட்டு வைத்துள்ளதால், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக அழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்படும் என எதிர் கட்சிகள் தெரிவித்தனர். அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மினி பஸ்களில் இடம் பெற்றுள்ள இரட்டை இலை சின்னங்கள் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: