பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதாக அதிகாரிகள் ஒப்புதல்

பேரணாம்பட்டு, மார்ச் 12: பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டில் தரக்காடு, குப்பைமேடு பகுதி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால் பேரணாம்பட்டு நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தரக்காடு, குப்பைமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் நேற்று பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் அருகே குடியாத்தம்- பேரணாம்பட்டு செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த நகராட்சி மேலாளர் தாமோதிரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தற்காலிகமாக டிராக்டரில் குடிநீர் வழங்குவதாக தெரிவித்தார். பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து நகராட்சி பணி மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, குப்பைமேடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும்போது முதலில் தாழ்வான பகுதிக்கு குடிநீர் செல்வதால் மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மேடான பகுதியில் இருக்கும் நபர்களுக்கு குடிநீர் சரிவர செல்வதில்லை. அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தற்காலிகமாக 6 டிராக்டரில் குப்பைமேடு, தரக்காடு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

Related Stories: