திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம் அம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை, மார்ச் 7: திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, அங்காளம்மன் வீதியுலாவில் பங்கேற்ற பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் அனைத்து சிவன் கோயில்களிலும் நடந்தது. மகா சிவராத்தி தினத்தன்று இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து இறைவனை வழிபட்டனர். சிவாலயங்களில் இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடந்தது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நள்ளிரவில் லிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, மாசி மாத அமாவாசை தினமான நேற்று மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை கருவாட்டுக்கடை தெரு, மணலூர்பேட்டை சாலை, புதுவாணியங்குளத்தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அங்காளம்மன் ேகாயில்களில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் வீதியுலா நடந்தது.

ேமலும், சிவன், பார்வதி, காளி உள்ளிட்ட பல்ேவறு ேவடங்கள் அணிந்த பக்தர்கள், ஊர்வலத்தில் பங்ேகற்று தங்களுைடய ேநர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், ஈசான்ய மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் உள்ள கோபால விநாயகர், முத்துமாரியம்மன், பெரியாழி, அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் மாசி பெருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அங்காளம்மன் கோயில் அருகே உள்ள மயானத்திற்கு நேற்று காலை பூங்கரகத்துடன் பக்தர்கள் காளிவேடம் அணிந்து வீதி உலா வந்தனர். மயானத்தில் கும்பம் படையலிட்டு அம்மனுக்கு கோழி பலி கொடுத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு படையலிட்ட கொழுக்கட்டை, சுண்டல், நவதானியங்கள் ஆகியவற்றை கொள்ளைவிட்டனர்.

பின்னர், கோயிலுக்கு பம்பை உடுக்கையுடன் வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் இரவு ஊஞ்சல் தாலாட்டு விழா நடைபெற்றது. அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து அம்மனுக்கு திருஷ்டி கழித்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன், மாரியம்மன், காளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மந்தை வெளிபகுதியில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அடுத்த பொய்யானந்தல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு மகா சிவராத்திரி மயானக்கொள்ளை விழா நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. தொடர்ந்து பிரம்மன் சிரசை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துசென்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: