பாதாள சாக்கடை மேன்ேஹால் உடைப்பால் கும்பகோணம் கஸ்தூரிபாய் சாலையில் தேங்கிய கழிவுநீர்

கும்பகோணம், பிப். 14: பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பால் கும்பகோணம் கஸ்தூரிபாஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயத்தில் ெபாதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் கஸ்தூரிபாய் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விரிவாக்க நகர் பகுதிகள் உள்ளன. மேலும் போக்குவரத்து கழக பணிமனை, ரயில்வே குட்ஷெட் உள்ளன. இதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள், 100க்கும் மேற்பட்ட பேருந்துகளும் கஸ்தூரிபாய் ரோட்டில் வந்து செல்கின்றன. இந்நிலையில் வாகனங்களின் அதிக பாரத்தால் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து மண், குப்பைகள் நிரம்பி அடைத்ததால் சாக்கடைகள் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவல நிலையில் இருக்கும் சாக்கடையால் வீடுகளில் உள்ளே கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது சம்பா அறுவடை பணி நடந்து வரும் நிலையில் நெல் மூட்டைகளை ரயிலில் ஏற்றுவதற்காக ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் மேலும் உடையும் அபாயம் உள்ளது. எனவே கஸ்தூரிபாய் ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீரை சுத்தப்படுத்தி மேன்ஹோல்களை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

Related Stories: