பள்ளி பரிமாற்ற திட்டத்தில் மாணவர்கள் சந்திப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி, பிப். 14: குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி அருகே ராமநாதன்குப்பம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ், வேறு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு சமூகஅறிவியல் பாடம் நடைபெற்றது. கடலூர் முதுநகர் அடுத்த சங்கரந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ராமநாதன்குப்பம் பள்ளிக்கு வந்திருந்தனர். இதேபோல், ராமநாதன்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த  8ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கரந்தோட்டம் பள்ளிக்கு சென்றிருந்தனர்.

சமூக அறிவியல் பாடம் நடத்திய பின்னர், அவர்கள் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த வேணுகோபால சாமி கோயிலுக்கு சென்று கோயிலின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொண்டனர். குறிஞ்சிப்பாடிக்கு சென்று நெசவுத் தொழில் பற்றியும் அறிந்தனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குள்ளஞ்சாவடி காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

Related Stories: