4 ஆண்டுகளாக விலை உயர்த்தாததை கண்டித்து பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பாடாலூர்,பிப்.13: கடந்த  4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததை கண்டித்தும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு  சங்க பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை

வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு, தீவனங்கள் விலை உயர்ந்தபோதும் கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததை கண்டித்தும், பால் கொள்முதல் விலை  ஒரு லிட்டருக்கு ரூ. 35 வழங்க வேண்டும். விற்பனை விலையை உயர்த்தாமல் கர்நாடகாவை போல தமிழக அரசும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்  மாட்டு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில்  வழங்க வேண்டும்.  பால் பணம் பாக்கி, போனஸ், ஊக்கத் தொகை உடனே வழங்க வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாலை கொள்முதல் செய்யும் இடத்திலேயே  சத்து, அளவு ஆகியவற்றை குறித்து வழங்கவேண்டும்.

பால் விற்பனையை அதிகப்படுத்த சத்துணவு திட்டத்தில்  பாலையும் சேர்த்து வழங்க வேண்டும். ஆரம்ப பணியாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும். பால் பவுடர் மற்றும் பால் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

போராட்டத்தில் கறவை பசு மாடுகளுடனும், பாலை கீழே ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் இரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: