திருச்சுழி அருகே தடுப்புச்சுவர் இல்லா தரைப்பாலம்

திருச்சுழி, பிப். 13: திருச்சுழி அருகே, உப்போடை மீது அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களிலும், மழை காலங்களிலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

திருச்சுழியை அடுத்த, மறவர்பெருங்குடி அருகே, க.விலக்கு செல்லும் சாலையில் உப்போடை மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. மழை காலங்களில் உப்போடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால், தரைப்பாலம் வழியாக ஓடையைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பரளச்சி, க.விலக்கு, தும்முசின்னம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் மறவர்பெருங்குடி, பந்தல்குடி, சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு குறுக்கு வழியாக செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சுத்தமடம், கல்லுப்பட்டி, மறவர்பெருங்குடி ஆகிய ஊர்களிலிருந்து வரும் பொதுமக்கள் கமுதி, சாயல்குடி ஊர்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் எம்.ரெட்டியபட்டி வழியாக  சுமார் 10 கி.மீ. சுற்றி கமுதி, சாயல்குடி ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும், உப்போடையை கடக்கும் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மறவர்பெருங்குடி, கல்லுப்பட்டி, சுத்தமடம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கமுதி, சாயல்குடி ஆகிய ஊர்களுக்கு மறவர்பெருங்குடியிலிருந்து குறுக்கு வழியாக செல்ல, தரைப்பாலத்தை கடக்க வேண்டும். மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: