சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட குமரி துணை நடிகை சந்தியாவின் உடல் உறுப்புகள் விற்பனையா? தாயார் சந்தேகம்

நாகர்கோவில், பிப்.13:  சென்னையில் துண்டு  துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது தாயார் சந்தேகம் தெரிவித்து உள்ளார்.

 குமரி மாவட்டம் தெரினசங்கோப்பு அருகே உள்ள ஞாலம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமாரி. இவரது மகள் சந்தியா (29). துணை நடிகையான இவர் திரைப்பட இயக்குனர் பாலகிருஷ்ணனை திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த பாலகிருஷ்ணன், அவரை துண்டு  துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் வீசினார். துப்புரவு தொழிலாளர்கள் சிலர் சந்தியாவின் கை, கால் பகுதிகளை கண்டெடுத்த பின்னர் தான் இந்த கொலை குறித்து தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்தியாவின் உடல் பாகங்களை மீட்டனர். இது தொடர்பாக  இயக்குனர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தியாவின் தலை மற்றும் மார்பு பகுதி  கிடைக்க வில்லை. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் சந்தியாவின் தலையை கண்டு

பிடிக்க முடிய வில்லை.

இது தொடர்பாக இயக்குனர் பாலகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். உடல் உறுப்புகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பர

பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சந்தியாவின் தாயார் பிரசன்ன குமாரி நேற்று, ஞாலத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபரிடம் கூறியதாவது : எனது மகள் சந்தியாவை பாலகிருஷ்ணன் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு சிலருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளது. முக்கியமான உடல் உறுப்புகளை காணவில்லை. எனவே எனது மகளை கொன்று உடல் உறுப்புகளை திருடி உள்ளனர். உடல் உறுப்புகளை விற்பதற்காகவே சந்தியாவை கொலை செய்து இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது பற்றி நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது மகள் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். சந்தியாவின் சகோதரி கூறுகையில், இந்த கொலையில் டாக்டர் உள்பட மேலும் சிலருக்கு ெதாடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு இந்த கொலை நடந்து இருக்கிறது . எனவே காவல்துறை விசாரணை நடத்தி வேறு சிலருக்கு ெதாடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: