கண்டராதித்த சோழன் ஏரியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் விவசாயிகள் மனு

அரியலூர், ஜன.11: அரியலூர் மாவட்டத்தில் சோழர்காலத்தில் வெட்டப்பட்ட கண்டராதித்தம் ஏரி, 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பல ஆண்டுகளாக  தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஏரியின் மையப்பகுதிகள் மேடு பகுதிகளாகி ஏரியின் ஓரத்தில் வாய்க்கால்போல் தற்போது காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யாமல்உள்ளது.இந்நிலையில் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் நம்மாழ்வார் இயற்கை விவசாயம் மற்றும் நற்பணி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி- சிதம்பரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை பணிகளுக்கு பட்டா நிலத்தில் பணம் கொடுத்து மண் எடுத்து சாலை பணிகளை செய்து வருகின்றனர். அதற்கு பதிலாக கண்டாரத்தசோழன் ஏரியில் மண் எடுத்தால் ஏரியையும் ஆழப்படுத்த முடியும். சாலை பணிகளுக்கு இலவசமாக மண்ணும் எடுத்து கொள்ளலாம். திருச்சி- சிதம்பரம் சாலைகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து மண்ணை எடுத்து சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆணையிட வேண்டும். மேலும் ஏரியில் மண்டியுள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: