பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரியில் வளர்ச்சி பணி ஆய்வு

பெரம்பலூர், ஜன. 11:  பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டக் கலெக்டரின் விருப்ப நிதியின்கீழ் ரூ.13.35 லட்சம் மதிப்பீட்டில் 170 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் பணிகளை பார்வையிட்ட பெரம்பலூர் கலெக்டர் சாந்தா கல்லூரிக்கு வந்து செல்லும், மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் இப்பணிகளை விரைந்து மேற்கொண்டு, உரிய காலத்தில், தரத்துடன் செய்து முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி வளாகத்தில் ரூ.23.52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான 24 கழிப்பறைகள் கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து மேற்கொண்டு, உரியகாலத்தில் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவியர் வசதிக்காக அதிகளவில் நிழல்தரும் மரங்களை நடவும், கல்லூரி வளாகத்தினை தூய்மையாக பராமரித்திடவும் மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிமுதல்வர் (பொ)ஜானகிராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், உதவி பொறியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், முரளிதரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Related Stories: