வாழப்பாடியில் ₹13 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வாழப்பாடி, ஜன.10: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 550 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை அனைத்தும் ₹13 லட்சத்துக்கு ஏலம் போனது. டிசிஹெச் ரக பருத்தி அதிகபட்சமாக ₹7,233க்கும், குறைந்த பட்சமாக ₹6,543க்கும், ஆர்சிஹெச் ரக பருத்தி அதிகபட்சமாக ₹5,999க்கும், குறைந்தபட்சம் ₹5,769க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது. வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இனி வரும் வாரங்களில் அதிகளவில் வியாபாரிகள் வரவேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: