மலைவாழ் மக்கள் திடீர் மறியல்

கருமந்துறையில் 41 பேர் கைதுவாழப்பாடி, ஜன.10:  அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மலைவாழ் மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நாடு தழுவிய அளவில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு ஊழியர்களும், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருமந்துறையில் நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கொடிகளை பிடித்தபடி மறியலில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகி பொன்னுசாமி தலைமையில் நடந்த மறியலில் மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Related Stories: