உலக மண்வள தினவிழா கருத்தரங்கம்

செந்துறை,டிச.6; அரியலூர் மாவட்டம் செந்துறையில் உலக மணவள தினத்தை முன்னிட்டு கிரீடு வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் டால்மியா பாரத் பவுண்டேசன் இணைந்து நடத்தும் மண் வளம் குறித்த கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன்(பொ), வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், கீரிடு வேளாண்மை ஆராய்ச்சி மைய அஉவலர் அழகு கண்ணன் மற்றும் இயற்கை விஞ்ஞானிகள் கலந்து கொண்டு, இரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும், மண் பரிசோதனை செய்து அதற்கான பயிர் செய்து அதிக லாபம் பெற ஆலோசனை வழங்கினர்.இந்நிகழ்சியில் முப்பது நபர்களுக்கு மண்வள அட்டையும், நூறு நபர்களுக்கு பூவரசு, தேக்கு மர கன்றுகளும் வழங்கப்பட்டது. மேலும் இயற்கையாக அமிர்த கரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் தாயார் செய்வது பற்றி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்சியில்  அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தாபழுர், செந்துறை பகுதியை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள்  மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

ஜெயங்கொண்டம் : வேளாண் துறை மூலம் உலக மண்வள தினவிழா ஜெயங்கொண்டம் அருகே உள்ள  த.வளவெட்டி க்குப்பம் கிராமத்தில் நடை பெற்றது. வேளாண்மை உதவி  இயக்குநர் ராஜேந்திரன், மண் ஆய்வு முடிவுகளின் அடிப் படையில்  உரமிடுவதால் உரச்செலவு குறைவதுடன் மண் வளமும் பாதுகாக் கப்படுவது, உயிர் உரங்கள் பயன்படுத்துவதன்  முக்கியத்துவம், மண்வள அட்டையில் உள்ள விபரங்கள் குறித்தும்  விரிவாக விளக்கிக் கூறினார். திரவ உயிர் உரங்கள் உற்பத்திமைய வேளாண்  அலுவலர் கலைச்செல்வி, திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும்  மண்வளத்தை பாதுகாக்க இரசாயன உரங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது  எனவும் விளக்கி கூறினார். விவசாயிகள் முன்னிலையில் சாகுபடி பயிர்களுக்கேற்ப  மண் மாதிரி எடுக்கும் முறை செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. விழாவில்  விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப் பட்டன. விவசாயிகளுக்கு பிரதம மந்திரி  பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விளக்கப்பட்டது. விழாவில் உதவி  வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்டஅலுவலர்கள் கலந்துகொண்டனர். தத்தனூர்  மற்றும் த.வளவெட்டிக்குப்பம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை  மகளிர் கலந்துகொண்டனர். வேளாண் உதவி அலுவலர் கோவிந்தராசு நன்றி  கூறினார்.

Related Stories: