அறிவியல் கண்காட்சியில் அசத்திய பந்தலுார் மாணவர்கள்

பந்தலூர், நவ.30 : பந்தலூர் டியூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அசத்தினர்.  பந்தலூர் டியூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுசீந்திரநாத் தலைமை வகித்தார்.  பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பரணிகுமார், வழக்கறிஞர் லூயிஸ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் ஜோஸ்னி வரவேற்றார்.  பந்தலூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 அறிவியல் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பயன்பாட்டியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சமூக அறிவியல் துறைகள் சார்ந்த  மாணவர்களின் படைப்புகளும் இயற்கை மற்றும் இயற்கை உணவுகள் குறித்தும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அரங்கையும் சிறப்பு அழைப்பாளர்கள் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கூடலூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுலைமான், உப்பட்டி எம்எஸ்எஸ் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், பந்தலூர் இந்தியன் வங்கி மேலாளர் விமலேஷ், ஆர்ஐ காமு, விஏஓ செந்தில்குமார், பந்தலூர் ஜெசிஐ முன்னாள் தலைவர் தனராஜ், நுகர்வோர் மையம் தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மாகாந்தி சேவை மைய தலைவர் நௌசாத்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எபினேசர், மற்றும் ஹரிராமன், பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் பங்ேகற்றனர்.

இதில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஆறு பள்ளிகளின் மாணவர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை கண்டு வியந்தனர். இறுதியாக ஆசிரியை சைமா நன்றி கூறினார். இன்றும் அறிவியல்  கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories: