நல வாரியங்களில் உறுப்பினர்கள் சேர்க்க பிதர்காட்டில் 15ம் தேதி சிறப்பு முகாம்

ஊட்டி, நவ. 14: நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் பந்தலூர் பிதர்காடு பகுதியில் 15ம் தேதி (நாளை) நடக்கிறது. தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புதொழிலாளர், அமைப்பு சாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர், முடகித்திருத்துவோர், தையல் தொழிலாளர், கைவினைத் தொழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டுப்பணியாளர், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சமையல் தொிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் என 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாரியங்களில் தொழிலாளர் பதிவு சேர்க்கை மாவட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்த நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் பந்தலூர் வட்டம், பிதர்காடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் நடக்கவுள்ளது. இந்த நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பித்தினை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்திலிருந்து கிடைக்கும் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம். அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய இயலாது. இந்த வாய்ப்பினை அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: