சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டம்

சேலம், நவ.1:  பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு துறைகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், பணிக்கொடை வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 9 மாதம் கொடுக்க வேண்டும். உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான காலவரையறை 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: