உர விலையை குறைக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாடாலூர், நவ. 1:  உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஆலத்தூர் வட்ட துணைத்தலைவர் தங்கராஜீ தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பச்சையா, வட்ட தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர்கள் கருப்புடையார், விநாயகம், வட்ட தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் ராஜாங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன், வட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் உர விலையை குறைக்க வேண்டும், யூரியா எடை குறைப்பை கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் புதிய விவசாய கடன் வழங்க வேண்டும். இரூரில் பொதுப்பாதையை தனிநபர் பட்டா போட்டதை ரத்து செய்ய வேண்டும். நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இரூர் காலனி தெருவில் தண்ணீர் தேங்காமல் வாரி அமைக்க வேண்டும். பெருமாள்பாளையம் ஏரியில் கிராவல் திருட்டை தடுக்க வேண்டும். தெரணியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடாலூரில் அவசர சிகிச்சைக்காக புதிய அரசு மருத்துவமனை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: